Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. இதேபோல், நேற்று செவ்வாய்க்கிழமையும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ஒரு சவரன் ரூ.45,360-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் 5,670-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக சரிந்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களுக்கு, இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,175-க்கும், ஒரு சவரன் ரூ. 49,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிரடியாக சரிந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76,500-க்கு விற்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“