Advertisment

எந்த மாற்றமும் இல்லை... இன்று நகை வாங்கலாமா?

இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனையாகிறது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 10 January 2024 CHENNAI in Tamil

ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold-rate: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், திங்கள் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து காணப்பட்டது. இதேபோல், நேற்று செவ்வாய்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 சரிந்து ஒரு சவரன் ரூ.46,560-க்கும், கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,820-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனையாகிறது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம்  ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,349-க்கும், ஒரு சவரன் ரூ.50,792-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை 

ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.78,000-க்கும் விற்பனையாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment