Gold Silver Price Today, 11 April 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 அதிகரித்தது. மறுநாள் செவ்வாய்க்கிழமையும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்தது. இதேபோல், நேற்று புதன்கிழமையும் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 53,640 -க்கும், கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,705 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருவதால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.160 உயர்ந்து ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,725-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.88,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“