Advertisment

மீண்டும் அதிரடி உயர்வு… தங்கம் விலை இன்றைய நிலவரம் பாருங்க!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,500-க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
Gold, silver price Today 11 August 2023 CHENNAI Tamil

சென்னையில் வெள்ளி ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20-க்கு விற்பனையாகிறது. (சென்னை தங்கம் விலை நிலவரம் 12 ஆகஸ்ட் 2023)

Gold, Silver Prices Today in Chennai tamil: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

Advertisment

கடந்த 4 நாட்களாக தங்கம் விலை சரசரவென குறைந்தது. செவ்வாய்கிழமை சவரனுக்கு 120 ரூபாயும், புதன்கிழமை 80 ரூபாயும், வியாழக்கிழமை 200 ரூபாயும் என கடகடவென தங்கம் விலை குறைந்தது. இதேபோல், நேற்றும் (வெள்ளிக்கிழமை) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ. 43,880-க்கும், கிராமுக்கு ரூ. 20 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,485-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,500 க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.44,000 க்கு விற்பனையாகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,000-க்கும், ஒரு சவரன் ரூ. 48,000-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Gold Rate Business Gold Gold Selling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment