Gold-rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், புத்தாண்டுகுப் பிறகு தங்கம் விலை கடகடவென சரிந்து வருகிறது. கடந்த 3 ஆம் தேதி முதல் இன்று வரை கிராமுக்கு 5 முதல் 45 ரூபாய் வரை சரிந்துள்ளது. அந்த வகையில், கடந்த திங்கள் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது. இதேபோல், மறுநாள் செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ. 80 சரிந்தது.
நேற்று புதன்கிழமை தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி முந்தைய விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதன்படி, சென்னையில் நேற்று 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,349-க்கும், ஒரு சவரன் ரூ.50,792-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில், இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு எவ்வித மாற்றமின்றி ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“