gold-rate | gold price toay | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கடந்த திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்த தங்கம் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 240 குறைந்தது. இதேபோல், புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை, வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 360 அதிரடியாக சரிந்தது.
ஆனால், நேற்று வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது. நேற்று ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.45,160-க்கும், ஒரு கிராம் 5,645-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தீப ஒளி திருநாளை ஒட்டி தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களுக்கு, இல்லத்தரசிகளும் மகிழ்சியில் உள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 சரிந்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் 5,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,109-க்கும், ஒரு சவரன் ரூ.48,872-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 76.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000-க்கு விற்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“