gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிரடியாக சரிந்து காணப்பட்ட நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக அதிரடியாக உயர்ந்தது.
நேற்று செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.43,040-க்கும், கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,380-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.42,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.5,372-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,860-க்கும், ஒரு சவரன் ரூ.46,880-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்த நிலையில், இன்று 50 காசுகள் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 75 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“