Gold Silver Price Today, 11th March: மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் கடந்த சில வாரங்களாக சரிவை சந்தித்து வந்தது. இது இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது. கடந்த சில நாள்களாக தங்கம் ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு ரூ.80 அதிகரித்து சவரனுக்கு ரூ.640 ஆக உள்ளது. சென்னையை பொறுத்தவரை 99.99 சதவீத தூயத் தங்கம் கிராம் ரூ.5632 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.45056 ஆக உள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.5270 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.42,160 ஆக விற்பனை ஆகி வருகிறது. இது நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.80ம், சவரனுக்கு ரூ.640ம் அதிகமாகும்.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று கிராம் ரூ.67.30 ஆக காணப்பட்ட வெள்ளி இன்று ரூ.68.70 ஆக காணப்படுகிறது. தற்போது கிலோ வெள்ளி ரூ.68,700 ஆக உள்ளது.
எனினும் இது இம்மாத தொடக்கத்தில் இருந்த வெள்ளி விலையை காட்டிலும் கிராமுக்கு ரூ.1.30 காசுகள் குறைவாகும். அதாவது கிலோ ரூ.1300 குறைவாகும்.
ஆனால் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் வெள்ளி விலை கிராம் ரூ.1.40 காசுகள் அதிகரித்து கிலோவுக்கு ரூ.1400 உயர்ந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/