Advertisment

2வது நாளாக அதிரடி சரிவு... இன்றைய தங்கம் ரேட் என்ன?

இன்று 2வது நாளாக தங்கம் விலை அதிரடியாக சரிந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 சரிந்து ஒரு சவரன் ரூ.45,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 12 December 2023 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,240-க்கும், ஒரு சவரன் ரூ. 49,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், இந்த வார தொடக்க நாளான நேற்று திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிந்து ஒரு சவரன் ரூ.46,000-க்கும், கிராமுக்கு ரூ. 15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,750-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இன்று 2வது நாளாக தங்கம் விலை அதிரடியாக சரிந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 சரிந்து ஒரு சவரன் ரூ.45,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,240-க்கும், ஒரு சவரன் ரூ. 49,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை 

வெள்ளியின் விலையைப் பொறுத்தவரை, கிராமுக்கு 10 காசுகள் சரிந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,700-க்கும் விற்பனையாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Business Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment