Advertisment

Gold Silver Price Today | சட்டென குறைந்த தங்கம் விலை... இன்று தங்கம் வாங்கலாமா?

Gold Silver Price Today | இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இது நகைப் பிரியர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 12 March 2024 CHENNAI in Tamil

ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று திங்கள் கிழமை தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Silver Price Today, 12 March 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.49,200-க்கும், கிராமுக்கு ரூ. 45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று திங்கள் கிழமை தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தங்கம் விலை 

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இது நகைப் பிரியர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ஒரு சவரன் ரூ.49,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 1 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,149-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,709-க்கும், ஒரு சவரன் 53,672-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வெள்ளி விலை 

வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.79,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment