இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த ஜூலையில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-லிருந்து 6 % ஆக குறைப்பு என நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய நிலையில், அதன்பிறகு தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்பட்டது.
ஆனால், தற்போது இஸ்ரேல் லெபனான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றம் சர்வதேச பங்குச் சந்தைகளில் எதிரொலித்து வருகிறது. முதலீட்டார்கள் அதிகம் தங்கத்தை வாங்கி வருவதால், அதன் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று இரண்டாவது நாளாக குறைந்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
தங்கம் விலை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1080 குறைந்து ஒரு சவரன் ரூ. 56,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 135 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,085-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
சென்னையில் இன்று வெள்ளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 100-க்கும், ஒரு கிலோ ரூ. 1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.