/indian-express-tamil/media/media_files/INr4ISa4tNS3z28F4Ifz.jpg)
சென்னையில், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,907-க்கும், ஒரு சவரன் ரூ.47,256-க்கும் விற்பனையாகிறது.
Gold-rate | gold | business:இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
இம்மாதம் 4-ம் தேதி சவரனுக்கு ரூ.42,280-க்கு குறைந்து விற்பனையாகிய தங்கம் விலை, சனிக்கிழமை மூண்ட இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்தது. ஆனால், மறுநாள் செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது.
நேற்று புதன்கிழமை சவரனுக்கு ரூ.64 குறைந்த தங்கம் விலை ஒரு சவரன் ரூ.42,976-க்கும், ஒரு கிராம் ரூ.5,372-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.43,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.43 உயர்ந்து ரூ.5,415-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,907-க்கும், ஒரு சவரன் ரூ.47,256-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500-க்கு விற்கப்படுகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.