Gold Silver Price Today, 13 April 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 அதிகரித்தது. மறுநாள் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.80 அதிகரித்த தங்கம் விலை புதன்கிழமையும் அதிரடியாக சவரனுக்கு ரூ. 280 அதிகரித்தது. இதேபோல் மறுநாள், வியாழக்கிழமையும் சவரனுக்கு ரூ.160 அதிகரித்த தங்கம் விலை, நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் அதிரடியாக சவரனுக்கு ரூ. 640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,440-க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,805-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. நாள்தோறும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை இன்று ஓரளவு குறைந்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்கப்படுகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ஒரு சவரன் ரூ.54,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,780-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 7,396-க்கும், ஒரு சவரன் 59,168-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
நேற்று வரலாறு காணாத உச்சத்தை எட்டிய வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ.89-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“