தொடர்ந்து சரியும் தங்கம் விலை: இன்று நகை வாங்கலாமா?

இன்று 3வது நாளாக தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 சரிந்து ஒரு சவரன் ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று 3வது நாளாக தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 சரிந்து ஒரு சவரன் ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 22 June 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,218-க்கும், ஒரு சவரன் ரூ. 49,744-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Advertisment

இன்றைய தங்கம் விலை 

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிந்தது. இதேபோல், நேற்று செவ்வாய்க்கிழமை 2வது நாளாக தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.240 சரிந்து ஒரு சவரன் ரூ.45,760-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இன்று 3வது நாளாக தங்கம் விலை அதிரடியாக சரிந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 சரிந்து ஒரு சவரன் ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
Advertisements

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,218-க்கும், ஒரு சவரன் ரூ. 49,744-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை 

வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ  வெள்ளி 
 ரூ.77,000-க்கு விற்பனையாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Rate Business Gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: