தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை; வெள்ளி விலையும் உயர்வு; நகைப் பிரியர்கள் அதிர்ச்சி

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 19 June 2024 CHENNAI in Tamil

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Rate:இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது. இதேபோல், மறுநாள் செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ. 80 சரிந்தது. புதன்கிழமை தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி முந்தைய நாள் விலையில் விற்பனை செய்யப்பட்டது. வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,480-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. நேற்று கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5820க்கும் விற்பனை செய்யப்பட்டது. சவரன் ரூ.46,520க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,845-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisment
Advertisements

24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,376க்கும், ஒரு சவரன் ரூ. 51,008க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் கடந்த 2 நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று கிராமுக்கு 50 பைசா அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: