Gold-rate | gold | business : இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
இம்மாதம் 4-ம் தேதி சவரனுக்கு ரூ.42,280-க்கு குறைந்து விற்பனையாகிய தங்கம் விலை, சனிக்கிழமை மூண்ட இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்தது. ஆனால், மறுநாள் செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது.
இருப்பினும், புதன்கிழமை சவரனுக்கு ரூ.64 குறைந்தது. ஆனால், நேற்று வியாழக்கிழமை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. சவரனுக்கு ரூ.344 உயர்ந்த தங்கத்தின் விலை ரூ.43,320-க்கும், கிராமுக்கு ரூ.43 உயர்ந்து ரூ.5,415-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.43,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.5,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,900-க்கும், ஒரு சவரன் ரூ.47,200-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் குறைந்துள்ள வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.75,000-க்கு விற்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“