gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது.
நேற்று முன்தினம் திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 44,120-க்கும், கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,515-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், நேற்று செய்யவாய் கிழமை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்த தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 44,160க்கும் ஒரு கிராம் ரூ.5,520-க்கும் விற்பனையாகியது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.43,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ. 5,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,978-க்கும், ஒரு சவரன் ரூ. 47,824-க்கும் விற்பனையாகியது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ. 77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77, 000 விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“