Gold-rate | gold Price today | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிந்தது. இதேபோல் மறுநாள் செவ்வாய்க்கிழமை 2வது நாளாக தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.240 சரிந்தது. தொடர்ந்து நேற்று புதன்கிழமை 3வது நாளாக தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 சரிந்து ஒரு சவரன் ரூ.45,600-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,700-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், கடந்த மூன்று நாளாக அதிரடியாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அப்படியே இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களுக்கு இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 அதிரடியாக அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,349-க்கும், ஒரு சவரன் ரூ. 50,792-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.2.50 அதிகரித்து வெள்ளி ஒரு கிராம் ரூ.79.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.79,500-க்கும் விற்பனையாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“