சவரனுக்கு ரூ.480 அதிரடியாக குறைந்த தங்கம்... நகைப் பிரியர்கள் ஹேப்பி!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.480 அதிரடியாக சரிந்துள்ளது. இதனால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் கொஞ்சம் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சவரன் ரூ. 46,000-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.480 அதிரடியாக சரிந்துள்ளது. இதனால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் கொஞ்சம் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சவரன் ரூ. 46,000-க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 29 February 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,273-க்கும், ஒரு சவரன் ரூ. 50,184-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Advertisment

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ. 46,640-க்கும், கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் ரூ.5,830-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும், நேற்று திங்கள் கிழமையும், தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ஒரு சவரன் ரூ. 46,480-க்கும், கிராமுக்கு ரூ. 20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,810-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

Advertisment
Advertisements

இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. இதனால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் கொஞ்சம் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ஒரு சவரன் ரூ. 46,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 60 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,750-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,273-க்கும், ஒரு சவரன் ரூ. 50,184-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை 

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிரடியாக சரிந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77, 000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: