சவரனுக்கு ரூ.200 உயர்வு... மீண்டும் ஆட்டம் காட்டும் தங்கம் விலை!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிரடியாக அதிகரித்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் 5,615-க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிரடியாக அதிகரித்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் 5,615-க்கு விற்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 14 November 2023 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,109-க்கும், ஒரு சவரன் ரூ.48,872-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold-rate | today gold price | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

Advertisment

தீபாவளி முடிந்த மறுநாளான நேற்று திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 சரிந்து ஒரு சவரன் ரூ.44,720-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,590-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களுக்கு, இல்லத்தரசிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் 5,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,109-க்கும், ஒரு சவரன் ரூ.48,872-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
Advertisements

வெள்ளி விலை 

வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து 76.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000-க்கு விற்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Business Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: