Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை காலை ஒரு கிராம் தங்கம் 5,410 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலை திடீரென கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து 5,510 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.44.080 ஆக விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து சென்னையில் வரலாறு காணாத அளவு உச்சத்தை எட்டியிருக்கிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.44,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,555-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,060-க்கும், ஒரு சவரன் ரூ.48,480-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000-க்கு விற்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“