gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது. செய்யவாய் கிழமை மீண்டும் சவரனுக்கு ரூ. 40 உயர்ந்த்து ஒரு சவரன் ரூ. 44,160க்கும் ஒரு கிராம் ரூ.5,520-க்கும் விற்பனையாகியது.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. சரனுக்கு ரூ.320 குறைந்த தங்கம் விலை ஒரு சவரன் ரூ.43,840-க்கும் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி அதே விலையே நீடிக்கிறது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,480 ரூபாய் ஆகவும், ரூ.43,840 ஆகவும், விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,978-க்கும், ஒரு சவரன் ரூ. 47,824-க்கும் விற்பனையாகியது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“