இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிந்தது. இதேபோல் மறுநாள் செவ்வாய்க்கிழமை 2வது நாளாக தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.240 சரிந்தது. தொடர்ந்து புதன்கிழமை 3வது நாளாக தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து காணப்பட்டது.
ஆனால், நேற்று வியாழக்கிழமை தங்கத்தின் விலை ஒரேயடியாக சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,560-க்கும், கிராமுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,820-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களுக்கு இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,360-க்கும், ஒரு சவரன் ரூ. 50,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500-க்கும் விற்பனையாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“