/indian-express-tamil/media/media_files/cymdFa6ejBVY7ljtCVXT.jpg)
சென்னையில் 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,158-க்கும், ஒரு சவரன் ரூ.49,264-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Gold-rate | gold price today | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தீபாவளி முடிந்த மறுநாள் திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 சரிந்தது. ஆனால், நேற்று செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிரடியாக அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,920-க்கும், கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ. 5,615-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களுக்கு, இல்லத்தரசிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.45,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் 5,645-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,158-க்கும், ஒரு சவரன் ரூ.49,264-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 1.70 அதிகரித்து ரூ. 77.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,700-க்கு விற்கப்படுகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.