gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது. செய்யவாய் கிழமை மீண்டும் சவரனுக்கு ரூ. 40 உயர்ந்தது.
ஆனால், நேற்றுமுன்தினம் புதன்கிழமை தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. சவரனுக்கு ரூ.320 குறைந்த தங்கம் விலை ஒரு சவரன் ரூ.43,840-க்கும் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், நேற்று வியாழக்கிழமை தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையிலே நீடித்தது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 44,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,000-க்கும், ஒரு சவரன் ரூ. 48,000-க்கும் விற்பனையாகியது.
வெள்ளி விலை
தங்கம் விலை போல் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை ரூ.50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 77,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“