Advertisment

அப்படியே பல்டி அடித்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் பாருங்க!

தங்கம் விலை இன்று அப்படியே அதிகரித்துள்ளது. இதனால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியில் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஒரு கிராம் தங்கம் ரூ.5,760-க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 19 March 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,284-க்கும், ஒரு சவரன் ரூ. 50,272-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Advertisment

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ. 46,640-க்கும், கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் ரூ.5,830-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும், நேற்று திங்கள் கிழமையும், தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது. 

தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது. மறுநாள், புதன்கிழமையும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 அதிரடியாக குறைந்தது. இதேபோல், நேற்று வியாழக்கிழமையும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ. 45,720-க்கும், கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,740-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், தங்கம் விலை இன்று அப்படியே அதிகரித்துள்ளது. இதனால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியில் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 45,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,284-க்கும், ஒரு சவரன் ரூ. 50,272-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை 

தங்கைப் போலவே வெள்ளி விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77, 000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment