Gold-rate | gold price today | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், தீபாவளி முடிந்த மறுநாள் திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 சரிந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிரடியாக அதிகரித்தது. இதேபோல், நேற்று புதன்கிழமையும் அதிகரித்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,160-க்கும், கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ. 5,645-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,635-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,147-க்கும், ஒரு சவரன் ரூ.49,176-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ. 78.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000-க்கு விற்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“