Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், இந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 44,448-க்கும், ஒரு கிராம் 5,556-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 208 குறைந்து ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.26 குறைந்து ஒரு கிராம் ரூ.5,530-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,033-க்கும், ஒரு சவரன் ரூ.48,264-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கு விற்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“