Gold-rate | gold price today | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிந்து ஒரு சவரன் ரூ.46,320-க்கும், கிராமுக்கு ரூ.40 சரிந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று (திங்கள்கிழமை) சற்று சரிந்து காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 சரிந்து ஒரு சவரன் ரூ.46,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,785-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,311-க்கும், ஒரு சவரன் ரூ.50,488-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
இன்று வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.80,000-க்கு விற்பனையாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“