Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், வாரத்தின் தொடக்க நாளான நேற்று திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிந்து ஒரு சவரன் ரூ.46,280-க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,785-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அப்படியே எகிறியுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,795-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,322-க்கும், ஒரு சவரன் ரூ.50,576-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
இன்று வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,500ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“