Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,320-க்கும், கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.5,540-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,055-க்கும், ஒரு சவரன் ரூ. 48,440-க்கும் விற்பனையாகியது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை ரூ.30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 78.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“