சற்று சரிந்த தங்கம்... இன்று நகை வாங்கலாமா?

இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,600-க்கு விற்பனையாகிறது.

இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,600-க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 21 December 2023 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,355-க்கும், ஒரு சவரன் ரூ. 50,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold-rate: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

Advertisment

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிந்தது. ஆனால் மறுநாள் செவ்வாய்க்கிழமை தங்கம் விலை அப்படியே எகிறியது. இதேபோல், நேற்று புதன்கிழமையும் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,680-க்கும், கிராமுக்கு ரூ. 40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,835-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,355-க்கும், ஒரு சவரன் ரூ. 50,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
Advertisements

வெள்ளி விலை 

வெள்ளி விலை 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கும், ஒரு கிலோ ரூ.80, 700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: