Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்தது. ஆனால், நேற்று செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.46,280-க்கும், கிராமுக்கு ரூ. 15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,785-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 25 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,810-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,338-க்கும், ஒரு சவரன் ரூ. 50,704-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77, 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.