Gold Rate: அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை... சவரனுக்கு இவ்வளவு உயர்வா?

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று அதிரடியாக அதிகரித்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று அதிரடியாக அதிகரித்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
 Gold Silver Price Today 01 July 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,397-க்கும், ஒரு சவரன் ரூ. 59,176-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Silver Price Today, 20 June 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

Advertisment

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 அதிகரித்தது. வாரத்தின் தொடக்க நாளான திங்கள் கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120  குறைந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 அதிகரித்தது. 

இருப்பினும், மறுநாள் புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து காணப்பட்டது. ஆனால், நேற்று வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,600-க்கும், கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 6,700-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தங்கம் விலை 

Advertisment
Advertisements

இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று அதிரடியாக அதிகரித்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. 

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 80 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,780-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,397-க்கும், ஒரு சவரன் ரூ. 59,176-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை

வெள்ளி விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ. 1.40 காசுகள் அதிரடியாக அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.98. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 98,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: