Advertisment

Gold Silver Price Today | ரூ 50,000 நெருக்கத்தில் தங்கம்; இன்று வரலாறு காணாத உச்சம்

Gold Silver Price Today | தங்கம் விலை இன்று உச்சத்திலும் உச்சம் தொட்டுள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் அதிர்ந்துள்ளனர். ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 760 அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 28 September 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,802-க்கும், ஒரு சவரன் 54,416-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Silver Price Today, 21 March 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. 

Advertisment

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை நோக்கி பயணித்தது. சவரன் ரூ.48 ஆயிரம், ரூ.49 ஆயிரம் என்ற நிலையை கடந்து விற்பனை ஆனது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது. ஆனால், மறுநாள் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 360 அதிகரித்தது. இதேபோல் நேற்று புதன்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 49,120-க்கும், கிராமுக்கு ரூ. 5 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 6,140-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தங்கம் விலை 

இந்த நிலையில், தங்கம் விலை இன்று உச்சத்திலும் உச்சம் தொட்டுள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் அதிர்ந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 760 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 49,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 95 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,235-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,802-க்கும், ஒரு சவரன் 54,416-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வெள்ளி விலை 

வெள்ளியின் விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. வெள்ளி விலை ரூ 1.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment