Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், இந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதனிடையே, கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 208 அதிரடியாக குறைந்தது. மறுநாள் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. ஆனால், அடுத்த நாளான புதன்கிழமை தங்கம் விலை அதிரடியாக அப்படியே அதிகரித்து, சவரனுக்கு ரூ. 400 உயர்ந்தது. இதேபோல், நேற்று முன்தினம் வியாழக்கிழமையும் சவரனுக்கு ரூ.120 அதிகரித்தது.
நேற்று வெள்ளிக்கிழமையும் தங்கம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 600 அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை ஒரு சவரன் ரூ.45,280-க்கும், ஒரு கிராம் ரூ.5,660-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,185-க்கும், ஒரு சவரன் ரூ.49,480-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. ரூ. 1.20 அதிகரித்துள்ள வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.78.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,700-க்கு விற்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“