Gold-rate | gold price today | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தற்காலிக போர் நிறுத்தம்
இந்நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 46-வது நாளாக போர் நீடித்து வந்த நிலையில் 4 நாட்கள் போரை நிறுத்த இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 150 பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக காஸாவில் பிணைக் கைதிகள் 50 பேரை விடுவிக்கவும், முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் மனிதாபிமான உதவிகளை வழங்கவும் இஸ்ரேல் நட்டு அரசும் - ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
இந்நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீன தாற்காலி போர் நிறுத்தம் தங்கம் விலையில் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த சில நாட்களுக்கு மேலும் தங்கம் விலை சரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து காணப்பட்டது. இதேபோல் நேற்று செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,840-க்கும், கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 5,730-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.45,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5,730-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,251-க்கும், ஒரு சவரன் ரூ.50,008-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 79-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000-க்கு விற்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“