Gold-rate: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிந்தது. ஆனால் மறுநாள் செவ்வாய்க்கிழமை தங்கம் விலை அப்படியே எகிறியது. இதேபோல், புதன்கிழமையும் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.320 அதிகரித்தது. எனினும், வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 என சற்று சரிந்தது. ஆனால், நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,880-க்கும், கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,860-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து மீண்டும் ரூ.47,000ஐ தொட்டுள்ளது. இதனால், நகைப் பிரியர்களுக்கு, இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.47,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,409-க்கும், ஒரு சவரன் ரூ. 51,272-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.80,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“