Gold Silver Price Today, 23 March 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது. ஆனால், மறுநாள் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 360 அதிகரித்தது. புதன்கிழமை சவரனுக்கு ரூ. 40 அதிகரித்தது. தொடர்ந்து 4வது நாளாக வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 அதிகரித்து உச்சத்திலும் உச்சம் தொட்டது. ஆனால், நேற்று வெள்ளிக்கிழமை தங்கம் விலை சட்டென சரிந்தது. சவரனுக்கு ரூ. 280 குறைந்து ஒரு சவரன் ரூ. 49,600-க்கும், கிராமுக்கு ரூ. 35 சரிந்து ஒரு கிராம் ரூ. 6,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் சற்று குறைந்துள்ளது. இது நகைப் பிரியர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ஒரு சவரன் ரூ. 49,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 35 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,747-க்கும், ஒரு சவரன் 53,976-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“