Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் 4 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால், நேற்று புதன்கிழமை தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் நிகழவில்லை. ஒரு சவரன் ரூ.45,840-க்கும், ஒரு கிராம் ரூ.5,730-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,740-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,260-க்கும், ஒரு சவரன் ரூ.50,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் எப்போது வாங்கினால் லாபம்?
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய சூழலில் விலை அதிரடியாக குறைவும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. இருப்பினும், இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்தம் தொடர்ந்தால் தங்கம் விலையில் அதிரடியான சரிவுகளை பார்க்கலாம். எதற்கும் இன்னும் 4 நாட்கள் பொறுத்து, அடுத்த வார தொடக்கத்தில் தங்கம் விலை நிலவரத்தை அறிந்து கொண்டு செல்வது ஆகச் சிறந்தது.
வெள்ளி விலை
வெள்ளி கிராமுக்கு 20 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 79.20 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.79,200-க்கு விற்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“