Advertisment

Today’s Gold Silver Price | மீண்டும் பல்டி அடித்த தங்கம் விலை... நகைப் பிரியர்கள் ஷாக்!

Gold Silver Rate Today | தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருவதால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 23 July 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,342-க்கும், ஒரு சவரன் ரூ. 58,736-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Silver Price Today, 24 April 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 

Advertisment

இன்றைய தங்கம் விலை 

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்தது. இதேபோல், திங்கள்கிழமையும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்தது. தொடர்ந்து 3-வது நாளாக நேற்று செவ்வாய்க்கிழமையும் தங்கம் விலை அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,160 குறைந்து ஒரு சவரன் ரூ. 53,600-க்கும், கிராமுக்கு ரூ. 145 குறைந்து ஒரு கிராம் ரூ.6,700-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருவதால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 53,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 30 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,730-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,342-க்கும், ஒரு சவரன் ரூ. 58,736-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வெள்ளி விலை

வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 10  காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 86.40 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.86,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment