மீண்டும் உச்சம் நோக்கி தங்கம் விலை... நகைப் பிரியர்கள் ஷாக்!

தங்கம் விலை தற்போது மீண்டும் கிடுகிடுவென அதிகரித்து வருவதால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.46,680-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தற்போது மீண்டும் கிடுகிடுவென அதிகரித்து வருவதால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.46,680-க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 15 March 2024 CHENNAI in Tamil

வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Advertisment

இன்றைய தங்கம் விலை

கடந்த திங்கள்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்தது. நேற்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி முந்தைய நாள் விலையில் விற்பனையாகிறது. அதன்படி, ஒரு சவரன் ரூ.46,640-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,830-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
Advertisements

24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,365-க்கும், ஒரு சவரன் ரூ. 50,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தற்போது மீண்டும் கிடுகிடுவென அதிகரித்து வருவதால் நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

வெள்ளி விலை 

வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: