Advertisment

Gold Rate Today | 2-வது நாளாக இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை: இன்று ரேட் என்ன?

Gold Silver Rate Today: கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று அதிரடியாக குறைந்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 24 May 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,255-க்கும், ரூ. 58,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Silver Price Today, 24 May 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

Advertisment

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 அதிரடியாக அதிகரித்தது. இதேபோல், திங்கள்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 அதிகரித்தது. ஆனால், மறுநாள் செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்தது. புதன்கிழமை தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகியது. நேற்று வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ. 54,000-க்கும், கிராமுக்கு ரூ. 110 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,750-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தங்கம் விலை 

இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று அதிரடியாக குறைந்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. 

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ. 53,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 100 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,650-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,255-க்கும், ரூ. 58,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வெள்ளி விலை

கடந்த சில நாட்களான வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் வெள்ளியின் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 96.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 96,500 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment