Gold-rate | gold price today | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் 4 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. அதனால், அன்றைய தினம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் நிகழவில்லை.
ஆனால், நேற்று வியாழக்கிழமை தங்கம் விலை சற்று அதிகரித்தது. சவரனுக்கு ரூ. 80 அதிகரித்த தங்கம் விலை ஒரு சவரன் ரூ.45,920-க்கும், கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,740-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கம் சட்டென குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,730-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,250க்கும், ஒரு சவரன் ரூ.50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி ஒரு கிராம் ரூ.79.20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.79,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“