Advertisment

சட்டென சரிந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

இன்று தங்கம் விலை அப்படியே குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 27 March 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,360-க்கும், ஒரு சவரன் ரூ. 50,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Advertisment

இன்றைய தங்கம் விலை

கடந்த திங்கள்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி முந்தைய நாள் விலையில் விற்பனையாகியது. ஆனால், நேற்று புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,680-க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,835-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை அப்படியே குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,360-க்கும், ஒரு சவரன் ரூ. 50,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை 

வெள்ளி விலை அதிகரித்துள்ளது. கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment