gold-rate | gold price today | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், இந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
நேற்று செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த தங்கம் விலை ஒரு சவரன் ரூ.45,400-க்கும், கிராமுக்கு ரூ. 15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,675-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,655-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,169-க்கும், ஒரு சவரன் ரூ.49,352-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கு விற்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“