Gold-rate | Gold Price Today| business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தங்கம் விலை அதிரடியக உயர்ந்து வருகிறது.
கடந்த சனிக்கிழமையன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,040-க்கும், கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,755-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,305 க்கும், ஒரு சவரன் ரூ.50,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1.30 ஒரு கிராம் ரூ.81.50-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“