Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், இந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நேற்று வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.360 அதிரடியாக அதிகரித்த தங்கம் விலை ஒரு சவரன் ரூ.45,600-க்கும், கிராமுக்கு ரூ. 45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,700-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சி உறைந்துள்ளனர்.
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.45,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,220-க்கும், ஒரு சவரன் ரூ.49,760-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கு விற்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“