Advertisment

Gold Silver Price Today | வரலாற்றில் முதல் முறை; ரூ. 50,000-ஐ தொட்ட தங்கம் விலை: பொதுமக்கள் ஷாக்

Gold Silver Price Today | தங்கம் விலை இன்று அதிரடியாக அதிகரித்து வரலாற்றில் முதல் முறையாக உச்சபட்ச விலையை எட்டியுள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 15 July 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,818-க்கும், ஒரு சவரன் 54,544-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Silver Price Today, 28 March 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. 

Advertisment

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்தது. ஆனால், திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்தது. இருப்பினும், செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்தது. ஆனால், நேற்று புதன்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 49,720-க்கும், கிராமுக்கு ரூ. 15 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 6,215-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இன்றைய தங்கம் விலை 

இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக அதிகரித்து வரலாற்றில் முதல் முறையாக உச்சபட்ச விலையை எட்டியுள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 50, 000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 35 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,818-க்கும், ஒரு சவரன் 54,544-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வெள்ளி விலை 

வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment