gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தங்கத்தின் விலை நேற்று திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 200 அதிரடியாக அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,240-க்கும், கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,780-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனையாகிறது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,305 க்கும், ஒரு சவரன் ரூ.50,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலே விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிராம் ரூ.81.50-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“